in

பிப்ரவரி 23 செலிப்ரிட்டி கிரிக்கெட் லீகில் (CCL) தொடங்குகிறது… கேப்டன் ஆர்யா பேட்டி

பிப்ரவரி 23 செலிப்ரிட்டி கிரிக்கெட் லீகில் (CCL) தொடங்குகிறது… கேப்டன் ஆர்யா பேட்டி

செலிப்ரிட்டி கிரிக்கெட் லீகில் எட்டு அணிகள் பங்கேற்க உள்ளனர். திரை நட்சத்திரங்கள் ஆண்டுதோறும் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி ரசிகர்கலால் பெருத்து விரும்பப்படும் ஒரு விளையாட்டு.

சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார். கங்கா பிரசாந்த் நிறுவனராக உள்ளார். அதேபோல் சென்னை அணியில் விஷ்ணு விஷால் ஜீவா, மிர்ச்சி சிவா, சாந்தனு, விக்ராந்த, பரத், பிருத்திவி, கலையரசன், எம் ஜே சத்யா, அசோக் செல்வன்,  ஆகிய நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.

பிப்ரவரி 23 ..2024 அன்று சிசிஎல் போட்டி தொடங்கி மார்ச் 17- 2024 அன்று முடிவடைகிறது. இப்போட்டி ஷார்ஜா, ஹைதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் என நான்கு மைதானங்களில் நடக்க உள்ளது.

சென்னை ரைனோஸ் தனது முதல் போட்டியை பஞ்சாப் அணியுடன் பிப்ரவரி 25 அன்று ஷார்ஜாவில் விளையாட திட்டமிட்டு இருக்கிறது. இந்த கிரிக்கெட் போட்டியை ஸ்டார் நெட்ஒர்க் ஒவ்வொரு மொழியிலும் ஸ்ட்ரீம் செய்ய உள்ளது.

தமிழில் விஜய் சூப்பர் சேனலில் இப்போட்டி ஒளிபரப்பபடும், டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாஸ் இந்த 20 போட்டிகளையும் ஸ்ட்ரீம் செய்ய உள்ளது.

இது குறித்து சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்தூரி கூறியதாவது சென்னை ரைசோன்ஸ் அணியின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது, ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு பிறகு CCL தான் ரசிகர்களுடைய அதிக பிரபலம் அதிக பார்வையாளர்கள் இப்போட்டியை பார்க்க வருகின்றனர்.

இந்த ஆண்டு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருக்கின்றோம் இந்த கிரிக்கெட் போட்டியில் விளையாட வரும் நடிகர்கள் அனைவரும் பணத்திற்காக அல்ல தங்கள் சொந்த விருப்பத்திற்காகவே விளையாட வருகின்றனர்.

ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவே அவர்கள் விளையாட வருகின்றனர். அதற்கு நாங்கள் முதலில் நன்றி கூறிக் கொள்கிறோம். நடிகர் ஆர்யாவை பற்றி கூறியதாவது , நடிகர் ஆர்யா ஒவ்வொரு வருடமும் சலிக்காமல் இதை ஆர்கனைஸ் செய்கிறார். அனைத்து நடிகர்களையும் ஒருங்கிணைத்து இந்த அணியை அழகாக வழி நடத்தி செல்கிறார்.

நடிகர் ஆர்யா கூறும் போது இந்த கிரிக்கெட் போட்டியின் போது சினிமாவை ஒதுக்கி வைத்து முழு நேரம் தங்களை விளையாட்டில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். நாங்கள் விளையாட்டு முடிந்து திரும்பியவுடன் திரும்பவும் இதே இடத்திற்கு ஒன்று கூடி வரும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது,

நடிகர் பரத் கூறியதாவது CCL போட்டியில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதை அழகாக இயக்குபவர் விஷ்ணு, இந்த சிசிஎல் அனைத்து மொழி நடிகர்களையும் நாங்கள் சந்தித்து நட்புடன் பழகுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த வருடம் கப் அடிப்போம் என்று நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.

What do you think?

ரஜினி கொடுத்த வாக்கை இன்னும் காப்பாற்ற வில்லை … நடிகை லக்ஷ்மி அவேசம்

பிறந்த நாள் கொண்டாடும் அமரன் சிவகார்த்திகேயன் இத்தனை கோடிக்கு அதிபதியா