in

லால் சலாம்.. ரசிகர்களை சலாம் போடவைத்ததா… பொறுத்திருந்து பார்போம்

லால் சலாம்.. ரசிகர்களை சலாம் போடவைத்ததா… பொறுத்திருந்து பார்போம்

 

நேற்று உலகம் முழுவதும் லால் சலாம் படம் வெளியானதை தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்துடன் லதா ரஜினிகாந்த் இணைந்து திரையரங்கில் படம் பார்த்த புகைப்படங்கள் இணையதளையில் வைரல் ஆனது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய வை ராஜா வை என்ற படம் தோல்வியை தழுவிய நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட்டை மையமாக வைத்து அதில் ஒளிந்திருக்கும் போராட்டம், ஜாதி பிரச்சனை மற்றும் அரசியலை பற்றி பேசுகின்ற படம் தான் லால் சலாம்.

இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோரோலில் நடித்துள்ளார், இவர்களுடன் லிவிங்ஸ்டன், தம்பி ராமையா, கே.எஸ் தனியா பாலகிருஷ்ணன், செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொடர்ந்து இப்படம் Positive விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் ரசிகர்கள் பலர்நம்ம தலைவரை போல மகள் ஐஸ்வறியா ரஜினிகாந்த்தும் வெற்றி பெற்றுவிட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் லதா ரஜினிகாந்த் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்துடன் இணைந்து திரையரங்கில் நேற்று படம் பார்த்தார் அப்பொழுது கேக் வெட்டி படத்தை வரவேற்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு சில கெட்ட மனிதர்கள் அரசியலை பயன்படுத்தி இவ்வாறு இரு சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள் இந்த சண்டை முடிவில்லாத, சமூக அமைதியின்மையையும் விரக்தியையும் ஏற்படுத்துகிறது என்பதை ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இத்திரைப்படத்தின் முலம் நிரூபிக்க முயற்சித்திருக்கிறார்.

இறுதியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவியதா, தேர்த் திருவிழா நடந்ததா என்பது தான் லால் சலாம் படத்தின் கதை. இந்த படத்தில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் முரார்பாத் கிராமத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன், தம்பியாக பழகுகின்றனர்.

அந்தக் கிராமத்தில் இருந்து சின்ன வயதில் மும்பைக்கு சென்று பெரிய தொழிலதிபராக மொய்தீன் பாய்யான ரஜினிகாந்த் மாறுகிறார்.. அவரது மகனான விக்ராந்த்தும், மொய்தீன் பாயின் நெருங்கிய நண்பரின் மகனாக விஷ்ணு விஷாலும் நடித்துள்ளனர்.

உள்ளே வலி இருந்தாலும் வெளியே புன்னகையுடன் சிங்கம்போல் எழுந்து, சாதனை படைத்திருக்கிறார் “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” “எட்டு மறுவினில் ஆனுக்கிங்கே பெண் இளைப்பில்லை கணென்று பாரதியார் கூற்றை நிருபித்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

What do you think?

அன்புமணி ராமதாஸ் இணக்கமாக உள்ள பாஜக அரசிடம் பேசி மருத்துவக் கல்லூரிகள் கேட்டு பெறலாம்

ஒரு நாள் விடியும் என்று நினைத்தவருக்கு …இன்று விடியாமலே போனது…