in

இந்த படம் நிச்சயம் உலக அளவில் கொண்டாடப்படும்…படக்குழுவின் நம்பிக்கையை காபாற்றுவார்களா ரசிகர்கள்

இந்த படம் நிச்சயம் உலக அளவில் கொண்டாடப்படும்…படக்குழுவின் நம்பிக்கையை காபாற்றுவார்களா ரசிகர்கள்

ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஆர் மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கிறார்கள்.

இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்கிறார். Major Mukund Varadarajan நிஜ வாழ்க்கையை மையமாக வைத்தும் இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற தொடரில் இருந்து ஒரு அத்தியாயத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் ‘அமரன்’ என்ற பெயர் தாங்கி அண்மையில் டீசர் டைட்டில் வெளியான போது இஸ்லாமியர்களுக்கு எதிரானது இப்படம் என்று சர்ச்சைகள் பல எழுந்து கமலஹாசன், சிவகார்த்திகேயன் மற்றும் டைரக்டர் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டம் நடைபெற்ற நிலையில் இப்படத்தினை பற்றி படக்குழு கூறியதாவது.

இப்படம் இந்தியாவையும் அதன் கதாநாயகர்களையும் கொண்டாடும் விதமாக உலகம் எங்கும் சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமையும், தமிழ் மற்றும் இந்திய சினிமா வரலாற்றில் நிச்சயம் ஒரு சாதனையை நிகழ்த்தும் நாயகனான சிவகார்த்திகேயன் தனது தனித்துவமிக்க கதாபாத்திரத்தை ஏற்று அட்டகாசமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

சண்டை காட்சிகளும் உணவுப் பூர்வமாக அமைந்திருக்கிறது சிவகார்த்திகேயனின் தோற்றம் அண்மையில் வெளியான நிலையில் சர்ச்சைகளை மீறி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

What do you think?

என் குறையை மறைத்து நான் கல்யாணம் பண்ண விரும்பவில்லை .. விஜயகுமார் பேத்தி தியா

விவசாயிகள் மோடிக்கு உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்… ஆடுகளம் கிஷோர்