in

கங்குலி படத்தில் நடிக்கும் ரஜினி

கங்குலி படத்தில் நடிக்கும் ரஜினி

2000ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். கிரிக்கெட் வீரர் கங்குலின் வாழ்க்கை தற்பொழுது படமாக தயாராக உள்ளது.

கங்குலியின் இளம் வயது முதல் அவர் பி சி சி ஐ தலைவராக பொறுப்பேற்றது வரை நடந்த நிகழ்வுகள் படத்தில் இடம்பெற உள்ளது. கங்குலி பேட்டிங்கில் கிங் அவர் இந்திய கிரிக்கெட் கேப்டனாக இருந்தபோது 28 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 11 போட்டிகளில் வெற்றி பெற்றார்

கங்குலியின் வாழ்க்கை படத்தில் கங்குலியாக ரன்வீர் கபூர், ரித்திக் ரோஷன் ஆயுஷ்மான் குரானா ஆகியோரை நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

கங்குலியின் வாழ்க்கை படத்தில் ரஜினி கௌரவத் தோற்றத்தில் நடிப்பதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது .

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அங்கூர் கர்க் மற்றும் லவ் ரஞ்சன் ஆகியோர் சவுரவை அவரது பெஹாலா வீட்டில் வெள்ளிக்கிழமை சந்தித்தனர். படம் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட்டது .

சௌரவ் கங்குலியின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை இருவரும் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரைக்கதை எழுதும் பணி ஏற்கனவே முடிந்துவிட்டது.

இப்படத்தின் இயக்குனர் ரஜினியை சந்தித்து, ரஜினியை இப்படத்தில் நடிக்குமாறு தான் கேட்டதாக கூறினார். ரஜினியின் மகளும் இப்படத்தை இயக்குவாரா என்பது விரைவில் வெளியாகும்.

What do you think?

தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்ய போகும் நடிகை ரெஜினா

வேலைக்கார பெண்ணை இப்படியா நடத்துவது…. ரஜினியை விளாசும் நெட்டிசன்கள்