in

வேலைக்கார பெண்ணை இப்படியா நடத்துவது…. ரஜினியை விளாசும் நெட்டிசன்கள்

வேலைக்கார பெண்ணை இப்படியா நடத்துவது…. ரஜினியை விளாசும் நெட்டிசன்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமிபத்தில் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால்சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை தற்போது ரஜினிகாந்த் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசை அமைக்கிறார்.

இப்படம் இந்த வருடம் மே அல்லது ஜூனில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ரஜினிகாந்த் ஆனந்த் அம்பானியின் நிச்சயத்தில் பங்கேற்க மனைவி மற்றும் ஐஸ்வர்யா உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை தாண்டி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது உண்டு. இந்நிலையில் ரஜினிகாந்த் சம்மந்த பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் ஜாம் நகருக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று இருக்கிறார்.

அப்போது அவருடைய பணிப்பெண் அவருடைய உடைமைகளை சுமந்தபடி பின்னால் வர திடீரென செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்க நிற்க சொன்னபோது….ரஜினிகாந்து குடும்பத்துடன் போஸ் கொடுக்கும் போது வேலைக்கார பெண்ணும் அருகில் நிற்க இதனை கவனித்த ரஜினிகாந்த் அப்பெண்னை தள்ளி நிற்கும்படி கூறுகிறார்.

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு தன் வீட்டில் வேலை செய்யும் பெண்னுடன் தியேட்டருக்கு சென்ற போது அப்பணிப்பெண்ணை நிற்க வைத்தே படம் பார்த்தார் என்று இணையத்தில் வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில், தற்போது இந்த வீடியோவும் சர்ச்சையை ஏற்படுதிருகிறது. குறை சொல்லணும் என்று நினைத்தால் எல்லாம் குறையாக தான் தெரியும். இந்த வீடியோவை பார்த்த வுடன் viewers தங்களுடைய கண்ணோட்டத்தில் இது சரியா தவறா என்று comments செய்யலாம்.

What do you think?

கங்குலி படத்தில் நடிக்கும் ரஜினி

IPL 2024 ஸ்டெய்னுக்கு பதில் டேனியல் விட்டோரி