in

விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவருர் பொன் குமார் ராபர்ட் புருஷை ஆதரித்து வாக்கு சேகரித்தார்


Watch – YouTube Click

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புருஷை ஆதரித்து விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவரும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான பொன் குமார் பாளையங்கோட்டையில் கட்டுமான தொழிலாளர்களிடம் கைச்சின்னத்திற்காக வாக்கு சேகரித்தார்.

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை ஆதரித்து கூட்டணி கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் கட்டிட தொழிலாளர் மத்திய சங்க தலைவரும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்க நல வாரிய தலைவருமான பொன் குமார் பாளையங்கோட்டை பகுதியில் கட்டுமான தொழிலாளர்களிடம் கை சின்னஆண்ட்ரூஸ் ஆதரவாக வாக்கு சேகரித்தார் .

அப்போது தொழிலாளர்களிடம் தமிழக அரசின் நல வாரியம் மூலம் தொழிலாளர்களுக்கு வழங்க கூடிய நலத்திட்டங்கள் குறித்தும் மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கையும் எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் திமுகவின் தோழமைக் கட்சி என்பதால் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். ஒன்றிய மோடியின் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி ஜனநாயகத்தை மீட்டு மாநில உரிமைகளை காத்திட தொழிலாளர்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறோம். தமிழகத்தில் 18 வகையான தொழிலாளர் நல வாரியம் அமைத்தது இந்தியாவிலேயே முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான். அந்த நல வாரியத்தின் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பட்டு வருகின்றனர் அவர்களின் வாக்குகளை இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் நேற்று தூத்துக்குடி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தோம் பல்வேறு இடங்களில் தொழிலாளர்களை சந்தித்தோம் தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரை கனிமொழி அவர்கள் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் அவரை எதிர்த்துப் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். அதே போல் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தோம் ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் சட்டங்களை மோடி அரசு திருத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றி உள்ளது மேலும் நேற்று பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு , ஒரே தேசம் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவோம் என ஏற்கனவே பழைய கதைகளை கூறியுள்ளனர் அதோடு மட்டுமல்லாமல் பெண்கள் இளைஞர்கள் முதியவர்கள் விவசாயிகள் ஆகியோர் மையப்படுத்தி திட்டங்கள் கொண்டு வருவோம் என கூறுகிறார்கள் ஆனால் 10 ஆண்டுகால ஆட்சியில் எதையும் செய்யவில்லை மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர் இதுவரை இளைஞர்களுக்கு எந்த விதமான வேலை வாய்ப்பும் வழங்கவில்லை விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

ரயிலில் முதியவர்கள் பயன்படுத்தி வந்த சலுகையை ரத்து செய்துள்ளனர் இது போன்ற தொழிலாளர் மக்கள் விரோதமான செயல்களையே பாஜக அரசு செய்துள்ளது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொறுத்தவரை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் தருவோம் என்கிறார்கள் பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைப்போம் என்கிறார்கள் மொத்தத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்த தேர்தலில் கதாநாயகனாக உள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகித பூவாகவே உள்ளது பாஜக வறுமையை ஒழிப்போம் என்றார்கள் ஆனால் இன்று 2021 ஆம் ஆண்டு 35 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர் திருக்குறள் கலாச்சார மையம் உலகம் முழுவதும் அமைப்போம் என்கிறார்கள் முதலில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிங்கள் பாஜக அரசு தமிழக மக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகிறது. மோடி தமிழக வருவது இதுதான் கடைசி முறை தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் அகில இந்திய அளவில் பாஜக 200 இடங்களையே பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீசன், மாநில துணை தலைவர் குமார், மாவட்ட தலைவர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்


Watch – YouTube Click

What do you think?

திருச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து கார்வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

நெல்லையில் காவல்துறையினர் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனர்