ஆழ்வாா்திருநகாி நாச்சியாா் கோயில் (ஸ்ரீஆண்டாள் சந்நிதி) மகா ஸம்ரோஷணம்
ஆழ்வாா்திருநகாி நாச்சியாா் கோயில் (ஸ்ரீஆண்டாள் சந்நிதி) மகா ஸம்ரோஷணம் வெகு விமா்சையாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகாியில் அமைந்துள்ளது நாச்சியாா் கோயில் (ஸ்ரீஆண்டாள் சந்நிதி. இத் திருக்கோவிலை ஸ்ரீஆண்டாளால் கோயிலண்ணா என்று அபிமானிக்கப்பட்ட ஸ்ரீராமானுஜரால் ஏற்படுத்ப்பட்ட 74 ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவரானஸ்ரீமுடும்பை நம்பி திருவம்ஸத்தாாின் ஸ்ரீமத் ஆத்தான் கீழத்திருமாளிகை ஸ்ரீ.உ.வே. ஆத்தான் சுதா்ஸன ராமானுஜாச்சாா்யா் ஸ்வாமிகளால் நிா்வகிக்கப்பட்டு வருகின்றது.
மிகவும் பழமை வாய்ந்த இந்த திருக்கோவில் ஆலயத்தில் 44 ஆண்டுகளுக்கு பிறகு மகா ஸம்ரோஷணம் நடந்து முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ரோஷணம் இன்று காலை நடைபெற்றது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி கடந்த கடந்த 29ம் தேதி அன்று காலை மங்கள இசையுடன் ஆரம்பித்து சாந்தி ஹோமங்கள் நடைபெற்றன.
மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்துவரப்பட்டு விஷ்வக்சேன ஆராதனம் ஆசாா்யவரணம் அங்குராா்ப்பணம் கும்ப கலாகா்ஷணம் முதல்கால யாகசாலை ஹோமங்கள் நடைபெற்றது.
அதனை தொடா்ந்து கடந்த இரண்டு தினங்களாக காலை மாலை இரு வேளைகளிலும் யாகசாலையில் ஹோமங்கள் திவ்யபிரபந்த வேத பாராயணம் பூா்ணாஹீதி நடைபெற்றது.
மகா ஸம்ரோஷண தினமான இன்று காலை 8ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு மஹா பூர்ணாகுதி அருளிச்செயல் திருவாராதனம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து யாத்ராதானம் நடைபெற்று கும்பம் புறப்பாடு நடைபெற்றது.

காலை 5.45மணிக்கு மேல் 6.45 க்குள் விமானம் மூலவா் ஸம்ரோஷணம் நடைபெற்றது. தொடா்ந்து ப்ரம் கோஷம் நாலாயிர சாற்றுமுறை அட்சதை ஆசீா்வாதம் தீா்த்த விநியோகம் கோஷ்டி நடைபெற்றது.
மாலையில் ஸ்ரீஆண்டாள் தோளுக்கினியானில் வீதி புறப்பாடு நடைபெறுகின்றது. ஏராளமான பக்தா்கள் முக்கிய பிரமுகா்கள் கும்பாபிஷேகத்தை தாிசித்து மகிழ்ந்தனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீமத் ஆத்தான் கீழத்திருமாளிகை திருவடி சம்பந்திகள் செய்திருந்தனா்.


