in

ஆடி தபசு திருவிழா: மேல சங்கரன்கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

ஆடி தபசு திருவிழா: மேல சங்கரன்கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

சிவனும், விஷ்ணுவும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில், அம்பாளுக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்றிணைந்து சங்கரநயினராக காட்சியளிக்கும் நிகழ்வினை ஆடித் தபசு நிகழ்வாக நாம் கொண்டாடி வருகிறோம்.

அந்த வகையில், தென்காசி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மேல சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சமேத கோமதி அம்பாள் ஆலயத்தில் கடந்த 18ஆம் தேதி ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்குகியது. நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வந்த நிலையில் நேற்று ஆடித்தபசு விழா தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தெற்கு மாசி வீதியில் வைத்து கோலாகலமாக நடைபெற்றது

அம்பாளுக்கு,, சிவனும், விஷ்ணுவும் ஒன்றிணைந்து சங்கரநயினராக காட்சியளிக்கும் நிகழ்வானது நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, சங்கரநயினார் மற்றும் அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவம், பரிவட்டம் கட்டுதல் போன்ற சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து ரத வீதிகளில் அம்பாள் மற்றும் சங்கரநயினார் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய விழாவாக கருதப்படும் திருக்கல்யாண நிகழ்வு கோவில் வளாகத்தில் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் மாலை மாற்றி திருக்கல்யாணம் சிவனுக்கும் கோமதி அம்பாளுக்கும் நடைபெற்றது. அதனை காண்பதற்காகவே திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிநெடுகிலும் நின்று மாலைகள் வழங்கியும் தேங்காய் பழங்கள் படைத்தும் மனமுருகி வழிபட்டனர்.

ஆடி தபசு திருவிழாவின் இறுதி நிகழ்வான
நாளைய நிகழ்வாக ஊஞ்சல் உற்சவமும், பைரவர் பூஜையும் நடைபெற உள்ளது.

What do you think?

Roulette with Free Spins UK for Beginners: A Comprehensive Guide

எச்சில் துப்பியதை தட்டிக்கேட்டவரின் கையை வெட்டிய இளநீர் வியாபாரி கைது