21 தியாகிகளுக்கு வன்னியர் சங்கத்தினர் அஞ்சலி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், வன்னியர் சங்கம் சார்பில் 1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் பலியான 21 நபர்களின் படத்திற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ப.மச்சேந்திரன், தலைமையில் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் மண்னப்பன், நகர செயலாளர் வரதன்
நகர துணைத் தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட வன்னியர் சங்க தலைவர் மச்சேந்திரன் தியாகிகள் படத்தின் முன்பாக மோட்ச தீபம் ஏற்றி மலர் தூவி சிறப்புரையாற்றிய போது, வன்னியர் சங்கம் இட ஒதுக்கீட்டுக்காக மாதக்கணக்கில் நடத்திய போராட்டம் என்பது உலகப்புகழ் வாய்ந்தது.
இன்று நமக்கு கிடைத்திருக்கும் சிறிய அளவு முன்னேற்றம் என்பது அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தால் வந்தது. அதைப் போற்றும் வகையில் தான் ஒவ்வொரு ஆண்டும் வன்னியர் சங்கம் சார்பில் இந்த அமைதிப் பேரணியை நாம் நடத்தி வருகிறோம் வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருந்த மாவீரன் குரு போராட்ட குணம் மிகுந்த தலைவர்.
அவர் இருந்த தீவிர இயக்கத்தை விட்டு அய்யா வழியை ஏற்ற அவர் அய்யாவின் போர்ப்படை தளபதி ஆனார். நெய்வேலி போராட்டத்தில் அவரது பங்களிப்பையும், வீரத்தையும் கண்ட அய்யா கொடுத்த பட்டம்தான் மாவீரன் என்பது.
பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை.அதை நான் ஒப்புக் கொண்டதுமில்லை. ஆனால் ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு குணம் உண்டு.இதில் வீரம் மிகுந்த இனம் வன்னியர் இனம் மட்டுமே.

அதே நேரத்தில் கனிவு கொண்ட இனம் வன்னியர் இனம். அந்த கனிவும் துணிவும் தான் சட்டமன்றத்தில் செளமியா அன்புமணி யின் வாதமாக இருக்கிறது. அது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் பாராட்டை தொடர்ந்து பெற்று வருகிறது.
நமக்காக நமது வாழ்க்கைக்காக தொடர்ந்து போராடிவரும் நமது தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களது கனவு மெய்ப்பட நமது ஒற்றுமையும், உழைப்பும் மிக முக்கியமானது என்று பேசினார்.
முன்னதாக,28-ஆவது ஆண்டாக வந்தவாசி 5 கண் பாலம் அருகே புறப்பட்ட பேரணியில்பாமக தலைவர் ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கீழ்புத்தூர் தசரதன் ஆசிரிய சுப்பிரமணி, இரும்பேடு சிவா உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கத்தினர் தியாக தீபத்துடன், கைகளில் மெழுகு வர்த்தி ஏந்தி புதிய பேருந்து நிலைய அணுகு சாலை, தேரடி, பஜார் வீதி, பழைய பேருந்து நிலையம், காஞ்சிபுரம் சாலை வழியாக திரெளபதி அம்மன் கோவில் திடலுக்கு வந்தனர். அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.


