in

மீனவர்கள் கரை திரும்ப ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு


Watch – YouTube Click

மீனவர்கள் கரை திரும்ப ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு

 

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983- ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் தேதி திங்கட்கிழமை முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை (2 நாட்களும் உட்பட) மொத்தம் 61 நாட்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளது.

பாரம்பரிய நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுகளைத் தவிர, விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படுகிறது. எனவே கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே அதாவது வருகிற 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்குதளத்திற்கு கரை திரும்ப படகு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறி மீன்பிடி தடைக்காலத்தில் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983- ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வக்கீஸ் தெரிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

கோயில் யானை இடம் ஆசிர்வாதம் பெற்று பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக வேட்பாளர்

ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து 90 பேர் பலி