in

பேனரில் தன் பெயர் இல்லாததால் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆத்திரம்


Watch – YouTube Click

பேனரில் தன் பெயர் இல்லாததால் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆத்திரம்

 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் லைன் பகுதியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16.05 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தலைமையில் நடைபெற்றது.
புதிய கட்டிடத்தை கீழ்வேளூர் எம் எல் ஏ வி.பி.நாகை.மாலி பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பொருள்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னதாக விழா மேடையில் வந்து அமர்ந்த எம் எல் ஏ, வரவேற்பு பேனரில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் பெயரும், தாட்கோ தலைவர் பெயர் மட்டுமே இடம்பெற்று இருந்தது, இதனால் ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ மாலி, என்னுடைய தொகுதியில் என்னுடைய மேம்பாட்டு நிதியில் தான் இந்த கட்டிடம் கட்டி திறப்பு விழா நடைபெறுகிறது.

ஆனால் சம்பந்தப்பட்ட என் பெயர் இல்லாமல் விழாவுக்கே வருகை தராமல் இருக்கும் அவர்கள் பெயரை எப்படி போட்டீர்கள் என்றும். யார் பெயரும் போடாமல் விட்டிருந்தாலும் பிரச்சனை இல்லை, ஆனால் ஒரு மூத்த எம்எல்ஏ நான், என்னுடைய நிதியில்தான் இந்த கட்டிடமே கட்டப்பட்டுள்ளது என்றும்,

சட்டமன்ற கூட்டத்தில் முதலில் வரிசையில் உட்காரும் தகுதி உடைய என்னை பெயர் போடாமல் அவமானப்படுத்துகிற விதமாக இருக்கிறது என்றும், நான் நம்பர் 1 எம்எல்ஏ என அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

இதனால் சிறிது நேரம் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததின் பெயரில் திறப்பு விழா செய்து,  பயனாளிகளுக்கு தொகுப்புகளும் வழங்கி முடிக்கப்பட்டது.

நிகழ்வில் கூட்டுறவுத்துறை சார்பில் வைக்கப்பட்ட பேனரில் எம்எல்ஏவின் பெயர் இடம் பெறாமல் இருந்ததால் எம்எல்ஏ கடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

நாகூர் அருகே கடையில் திடீர் தீ விபத்து 2 மணி நேரம் போராடி அனைத்தனர்

அகில இந்திய அளவில் போதை பொருள் விற்பனை செய்யும் மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது