in

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் (House of Commons) பகவத் கீதை


Watch – YouTube Click

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் (House of Commons) பகவத் கீதை

 

ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் பகவத் கீதை பிரதி இங்கிலாந்து நாடாளுமன்ற சபாநாயகர் ஸர் லிண்ட்ஸே ஹாய்லேவிடம் (Sir Lindsay Hoyle) இங்கிலாந்து நாடாளு மன்ற உறுப்பினர் சைலேஷ் ஓரா வழங்கி னார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படும் ஹிந்து உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற் காக பகவத் கீதை நூல் வழங்கப்பட்டுள்ளது. இது மாயாபூர் (மேற்கு வங்கம்) ஆல்யத்தில் பூஜிக்கப்பட்டு எடுத்துவரப் பட்டுள்ளது.

வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ள தேர்தலுக்குப் பிறகு இது பயன்படும்.

புனித நூல் பகவத் கீதையைப் பெற்றது தனக்குக் கிடைத்த மரியாதையாகக் கருதுவதாகக் கூறியுள்ள சபாநாயகர் சர் லிண்ட்ஸே ஹாய்லே அதை நாடாளுமன்ற நூலகத்தில் வைத்திடப் போவதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மன்னர் முன்பு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வது வழக்கில் இருந்து வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

6 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரிக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பறவைகள்

நெல்கொள்முதல் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததை காங்கிரஸ் கட்சி தொழிற்சங்க பொதுச்செயலாளர் கண்டனம்