in

வினோத காதலில் சிக்கிய சீன மாணவன்


Watch – YouTube Click

வினோத காதலில் சிக்கிய சீன மாணவன்

 

சீனாவில் ஒரு கல்லூரி மாணவன் தான் மிக அழகாக இருப்பதாகவும் தன்னை பெண்கள் அனைவரும் காதலிப்பதாகவும் நினைத்து கொள்ளும் வினோத நோய் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும், லியு எனும் 20 மாணவன் ஒருவன், தான் இந்த பல்கலைகழகத்திலேயே மிக அழகான ஆண் என்றும், அதனால் இங்குள்ள பெண்கள் தன்னை காதலிப்பதாகவும் நினைத்து கொண்டார்.

இந்த வித்தியாசமான காதல் நோய் ( Delusional Love Disorder ) அறிகுறி முற்றி, கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பெண்ணிடம் சென்று காதல் வார்த்தைகளை பேச தொடங்கியுள்ளான் அந்த மாணவன். உடனே அந்த பெண் அவனிடம் எதிர்ப்பை தெரிவிக்க, இந்த பெண் தன்னை காதலிக்க வெட்கப்படுகிறாள் என நினைத்துக்கொள்ளும் அளவுக்கு இந்த வினோத நோய் அந்த மாணவனிடம் தீவிரமடைந்துள்ளது.

இந்த பிரச்சனை தீவிரமடைந்ததை தொடர்ந்து, உள்ளூர் மருத்துவமனையில் மாணவனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். லியு கல்லூரியில் படிக்கும் எல்லா பெண்களும் தன்னை விரும்புவது போலவே நினைத்து கொண்டு இருக்கிறான் என மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது.

லியு, தான் பல்கலைக்கழகத்தில் சிறந்த தோற்றமுடைய மாணவன் என்று நினைத்து கொள்கிறன். அதனால், அவனது பள்ளி தோழர்கள் பலருக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும், மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், லியு இரவு முழுவதும் விழித்திருப்பது, வகுப்பில் கவனம் சிதறுவது மற்றும், பணத்தை வீணாக செலவு செய்வது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளான்.

இப்படியான வினோதமான காதல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள லியு எனும் மாணவன் தற்போது மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.


Watch – YouTube Click

What do you think?

100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம் என 100 சதவீதம் வடிவில் நின்று உறுதி மொழி

மதுபானத்திற்கு “வீரன்” என்று தமிழில் பெயர் வைத்திருக்கின்றனர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்