திருவண்ணாமலை விடிய விடிய கிரிவலம்
விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டு தங்களது ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்……
ஆவணி மாத பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் வந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்தனர். விழுப்புரம் காட்பாடி பயணிகள் ரயில் வந்தவுடன் ரயிலில் இடம் பிடிக்க ஒருவருக்கு ஒருவர் முண்டிடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவணி மாத பௌர்ணமி நேற்று காலை 9:53 மணிக்கு தொடங்கி இன்று காலை 10:29 மணிக்கு நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் நேற்று இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.

விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் கிரிவலம் முடிந்த பிறகு தங்களது ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
அப்போது விழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் வந்தவுடன் பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.


