in

ரயிலை நிறுத்திய தம்பதியினருக்கு முதல்வர் பாராட்டை தெரிவித்து ரூபாய் 5 லட்சம் வெகுமதி


Watch – YouTube Click

ரயிலை நிறுத்திய தம்பதியினருக்கு முதல்வர் பாராட்டை தெரிவித்து ரூபாய் 5 லட்சம் வெகுமதி

 

தென்காசி மாவட்டம் தமிழக – கேரள எல்லை பகுதியை அடுத்துள்ள எஸ் வளைவில் 40 அடி பள்ளத்தில் ரயில்வே தண்டவாளத்தில் தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றி சென்ற லாரி விழுந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

நேற்று முந்தினம் நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற விபத்தை தொடர்ந்து நான்கு மணி போராட்டத்திற்கு லாரி அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டு இரயில் சேவை தாமதமாக இயக்கப்பட்டது.

இந்த விபத்தின்போது செங்கோட்டை திருவனந்தபுரம் சிறப்பு ரயில் வந்து கொண்டிருந்ததை அறிந்த அப்பகுதியில் குடியிருக்கும் விவசாயியான முதியவர் சண்முகையா சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு பெரும் ரயில் விபத்தை தடுத்த சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் புளியரையில், ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்தி நிறுத்திய தம்பதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியினருக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


Watch – YouTube Click

What do you think?

திருவாரூர் மாவட்டத்தில் 90 சதவீத வருவாய் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

வெறி நாய் கடித்து இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி