ஆடி மாத அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய்
ஆடி மாத அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் 6 கோடியே 29 லட்சம்…… தங்கம் 197 கிராம் மற்றும் வெள்ளி 1 கிலோ 640 கிராம் என பக்தர்கள் காணிக்கை…..
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பௌர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.
அண்ணாமலையார் கோவில் மற்றும் அஷ்ட லிங்கத்தில் பிரார்த்தனை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலில் அனைத்தும் அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்கல்யாணம் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.
குறிப்பாக ஆடி மாத பௌர்ணமி கடந்த 28ம் தேதி இரவு தொடங்கி மறு நாள் 29ம் தேதி இரவு 8:54 மணிக்கு நிறைவடைந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவில் ராஜ கோபுரம் எதிரே கற்பூரம் ஏற்றி 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.

கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் அண்ணாமலையார் கோவில் மற்றும் அஷ்ட லிங்கத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தினர். இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் பக்தர்கள் 6 கோடி 29 லட்சத்தி 99 ஆயிரத்து 271 ரூபாய், தங்கம் 197 கிராம் மற்றும் வெள்ளி 1 கிலோ 640 ராம் என காணிக்கை செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

