சூர்யா பிறந்தநாளில் 50 பெண் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேனி தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் விவசாயத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது
குறிப்பாக பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டிப்பட்டி வைகை மகளிர் பெண்கள் இயக்கத்தின் கீழ் பயனடைந்து வரும்50 பெண் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பெண் விவசாயிகளை பாராட்டி அவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்ததோடு
அதிலும் சிறந்து விளங்கிய பெண் விவசாயி பஞ்சவர்ணத்திற்கு சிறந்த விவசாயி என்று பாராட்டி மருந்து தெளிப்பான் கருவியை வழங்கினர்
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்க தேனி தெற்கு மாவட்ட தலைவர் தேவா, மாவட்ட செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராஜேஷ் மற்றும் ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர் குபேந்திரன் செயலாளர் கோபி பொருளாளர் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பெண் விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில்
இதில் வைகை பெண்கள் இயக்க இயக்குனர் சின்னாண்டி தலைவர் ஜெயலட்சுமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்


