in

ஏரியில் வண்டல் மண் திருட்டு உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

ஏரியில் வண்டல் மண் திருட்டு உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

 

மேல்மலையனூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் ஏரியில் வண்டல் மண் திருட்டு நடைபெறுவதாக ஒன்றிய குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றிய குழு கூட்டம் கூட்ட அரங்கில் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒன்றியத்தில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து மன்றத்தில் முன்வைத்தனர்.

மேலும் வட்டாரவளர்ச்சி அலுவலர் சரவணகுமார் மன்றத்தில் அரசு கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் பிரியா

மேல்மலையனூர் ஒன்றியத்தில் உள்ள அரசு பொதுப்பணித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் அதிகளவு அனுமதித்த அளவை விட அதிகமாக மண் திருட்டு நடைபெறுவதால் நிலத்தடி நீர் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் வட்டாட்சியர் மட்டுமே மண் தேவைப்படுபவருக்கு அனுமதி அளித்து வருவதால் பயனாளிகளுக்கு சென்றடையாமல் மண் திருட்டில் ஈடுபடும் வியாபாரிகள் அதிகளவு மண் திருட்டில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இச்சம்பவம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார் பதிலளிக்கையில் பிரச்சனை குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இனிமேல் பொதுப்பணித்துறை மற்றும் ஒன்றிய அலுவலக எல்லைக்குட்பட்ட ஏரிகளில் மண் அல்ல அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக பதில் அளித்தார்.

மேலும் ஒன்றிய கூட கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளாமல் குறிப்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த அதிகாரியும் கலந்து கொள்ள சொல்வது கிடையாது என மன்றத்தில் புகார் எழுந்தது.

இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

சூர்யா பிறந்தநாளில் 50 பெண் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்