in ,

தமிழக முதல்வரின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற சிறப்பு ரத்ததான முகாம் 

தமிழக முதல்வரின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற சிறப்பு ரத்ததான முகாம் 

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லணை தலைமையிலான சிறப்பு ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது

சென்ற ஆண்டு 500க்கும் மேற்பட்டோர் குருதிப்புடை வழங்கிய நிலையில் இந்த ஆண்டு அவருடைய 52 வது பிறந்த நாளை குறிக்கும் வண்ணம் 152 பேர் நபர்கள் குருதிப்புடை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு

அரசு ராஜாஜி மருத்துவமனை மதுரை செஞ்சிலுவை சங்கம் மற்றும் தனியார் கல்லூரியை சேர்ந்த தன்னார்வலர்கள் இப்படியாக 200க்கும் மேற்பட்ட சிறப்பு குழுவினர் இந்த குருதிகொடை முகாமில் ஈடுபட்ட நிலையில்

   

வரக்கூடிய நபர்களுடைய பெயர் விபரங்கள் உடல் எடை ரத்த தானம் செய்வதற்கான தகுதி உள்ளிட்டவைகள் பெறப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு ரத்ததானம் வழங்கலாமா என மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு ரத்ததான முகாம் நடைபெறக்கூடிய மதுரை தமுக்கம் மைதானத்துடைய உள்ளரங்கில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்

ரத்ததான முகாம் நடைபெறக்கூடிய பகுதிக்கு ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொடர்ந்து வருகை தந்த நிலையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழகச் செயலாளருமான கல்லணை நேரில் வருகை தந்து இந்த ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்

அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து ரத்ததான முகாமிற்கான ஒரு நினைவு லோகோவை தொடங்கி வைத்த பிறகு ரத்ததான முகாமில் கலந்து கொள்ள வந்து ரத்த தானம் வழங்கிய ஒவ்வொரு இளைஞர்களையும் பார்த்து தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார்

குறிப்பாக ரத்த தானம் கொடுத்த பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு மருத்துவர்கள் சொல்லக்கூடிய அறிவுரையை கேட்டு விட்டு தான் அங்கிருந்து செல்ல வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ஆர்வமாக இங்கே ரத்ததானம் கொடுக்க வருகை தந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றி என்றும் தொடர்ந்து ரத்ததான முகாம் நடைபெறக்கூடிய பகுதியில் இருந்த ஒவ்வொரு இளைஞர்களையும் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்

மக்களின் முதல்வர் தளபதி அவர்களுடைய 52 வது பிறந்த நாளை முன்னிட்டு 1052 நபர்கள் ரத்த தானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை இன்று துவக்கி இருக்கின்றோம்

இந்த முகாமில் கலந்து கொண்டுள்ள தோழர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

எங்களது அழைப்பை ஏற்று இந்த முகாமிற்கு வருகை தந்து இருக்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் கடந்த ஆண்டு 552 நபர்கள் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தும்

தளபதி அவர்களுடைய 21 வது பிறந்தநாள் 25 ஆவது பிறந்தநாள் இப்படியாக ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாளை ரசிகர் மன்றமாகவும் மக்கள் மன்றமாகவும் நாங்கள் பயணித்த போது 30 நபர்களில் ஆரம்பித்த எங்களது குழுவினருடைய இந்த பயணம் இன்று 500 நபர்களை தாண்டி ரத்த தானம் வழங்க கூடிய அளவில் உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு தளபதி அவர்கள் தான் காரணம்

மக்களின் முதல்வராக இன்று இருக்கக்கூடிய தளபதி அவர்களுடைய ரத்தத்தின் ரத்தங்களாக எங்கள் தலைவருக்காக தமிழகம் முதல்வருக்காக ரத்தம் கொடுக்கக்கூடிய வகையில் தொடர்ந்து இளைஞர்களும் தொண்டர்களும் நிர்வாகிகளும் வருகை தந்து வண்ணம் இருக்கிறார்கள்

கட்சி சார்ந்து இல்லாமல் நிறைய பொதுமக்களும் இதில் பங்கு பெற்றுள்ளனர் குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் என்னுடைய தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு தங்கள் பகுதியில் இருக்கக்கூடிய குறைகள் குறித்து தொடர்பு கொள்ளும் மக்கள் இந்த குருதிக் கூடையிலும் பங்கு பெறுவதற்காக 15-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கொண்டது எங்களது மகிழ்ச்சி அளிக்கிறது

நாங்கள் எப்போதுமே சொல்லுவது போல தலைவர் தமிழகத்திற்கான பொதுவான ஒரு தலைவராக இருந்து வருகிறார். அதுவும் முதல்வராக இருக்கக் கூடிய அவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ரத்ததானம் வழங்குவது குறிப்பிடத்தக்கது அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்னும் லட்சக்கணக்கான தமிழகம் முழுவதும் ரத்ததானம் வரும் நாட்களில் செய்ய உள்ளார்கள்

நடிகராக மட்டுமல்ல தலைவராக மட்டுமல்ல தற்போது தமிழக முதல்வராகவும் அவர் உள்ள நிலையில் அதே சேவையை நாங்கள் தொடர்ந்து ஆரம்ப காலகட்டத்தில் செய்த சேவையை தொடர்ந்து நாங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றோம்

இந்த மருத்துவ முகாமிற்காக நாங்கள் மருத்துவர்களை அணுகியபோது மிகச்சிறந்த ஒரு சேவை என்றும் ஒருவர் கொடுக்கக்கூடிய ரத்தம் மூன்று உயிர்களை காப்பாற்ற முடியும் என்று அவர்கள் கூறினார்கள் அப்படி இருக்கையில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இங்கு ஒன்றுகூடி ரத்ததானம் வழங்கும் நிலையில் 3000-க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்ற முடியும் என்பது உண்மை

சென்ற ஆண்டு நாங்கள் ரங்க மகாலில் 500க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினோம் இந்த ஆண்டு இந்த ரத்ததான முகாமில் கலந்து கொள்வதற்காக 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு இங்கே வருகை தந்திருக்கிறார்கள்

தானத்தில் சிறந்தது ரத்த தானம் அதனை தொடர்ந்து வரக்கூடிய காலங்களில் நாங்கள் செய்வோம் தொடர்ந்து கண்காணிப்பு செய்வதற்காக திட்டமிட்டு இருக்கிறோம் வரும் வாரம் அது குறித்து உங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு அந்த முகாமையும் நடத்த உள்ளோம்

பொதுவாக நலத்திட்டங்கள் யார் வேணாலும் செய்யலாம் பணம் இருக்கக் கூடிய எவர் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் தளபதியை நேசிப்பவர்கள் மட்டும்தான் இது போன்ற ரத்த தானம் உள்ளிட்ட சேவைகளை செய்ய முடியும்

அதிலும் மதுரை என்றால் கேட்கவா வேண்டும் எந்த ஒரு நிகழ்வுகளாக இருந்தாலும் அது மதுரையில் இருந்து தொடங்குவது தனி சிறப்பு தான் அந்த வகையில் தளபதி அவருடைய பிறந்தநாள் ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல ஒரு வார கொண்டாட்டம் அல்ல அது நாள் முழுவதும் கொண்டாட கூடிய ஒரு விழாவாகும்

மதுரை மட்டுமல்ல தமிழக முழுவதுமே ஏதாவது ஒரு நலத்திட்ட உதவிகளை தமிழகம் முதல்வருடைய பெயரில் தொடர்ந்து எங்களது கட்சியை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் இந்த நிலையில் நாங்கள் இன்று மதுரையிலிருந்து இந்த ரத்ததான முகாமை ஆரம்பித்து இருக்கின்றோம்

 
என்னுடைய வடக்கு தொகுதியை பொருத்தவரை கழிவுநீர் குப்பை கழிவுகள் உள்ளிட்டவைகள் ஒரு மிகப்பெரிய சவாலான பிரச்சனையாகவே இருந்து வருகிறது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்களிடமும் தொகுதி மக்களுடைய கோரிக்கையை கொண்டு செலுத்தி இருக்கின்றேன் இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்

குறிப்பாக பந்தல்குடி வாய்க்கால் பகுதியில் செல்லூர் கண்மாய் நீர் செல்வதற்கான தான் பணிகள் நடைபெற்றுவதாக கூறப்படக்கூடிய நிலையில் அந்த பகுதி மக்களுடைய கழிவுநீர் செல்வதற்கான பாதைதான் எங்கே சரியான திட்டமிடுதல் இல்லாத காரணத்தினால் மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்குவதும் கழிவுநீர் வெளியேறுவதுமான ஒரு நிலை இருந்து வருகிறது

தளபதி அவர்களுடைய பிறந்தநாளின் போது மதுரை தமுக்கம் மைதானத்திற்கான குளிரூட்டப்பட்ட உள்ளரங்கில் இது போன்ற ஒரு ரத்ததான முகாம் நடத்துவது எங்களது மகிழ்ச்சி ஏனென்றால் என்னுடைய நீண்ட நாள் ஆசை ரசிகனாக மாவட்ட செயலாளராக இருந்தபோது கிடைக்காத ஒரு சந்தோஷம் தற்போது சட்டமன்ற உறுப்பினராகிய பிறகு தமிழக முதல்வருக்கு இது போன்ற ஒரு ரத்ததான முகாம் நடத்துவது எங்களுக்கு கிடைத்த ஒரு பாக்கியமாகவே நான் பார்க்கின்றேன்.

பந்தல்குடி வாய்க்கால் முதற்கொண்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சரியான திட்டமிடுதல் இல்லாத ஒரு காரணம் காரணமாகவே மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதும் கழிவு நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவது மாகாண ஒரு நிலை இருந்து வருகிறது அதற்கான நிரந்தர தீர்வு காணும் வகையில் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றோம் விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும் என்றார்

What do you think?

அதிமுக எம்.பி. இன்பதுரை பேச்சுக்கு, அதிமுக மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா கண்டனம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆதிமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்