நாமக்கல் ஆரியூர் முத்துசாமி ஆலயத்தில் ஆடி பௌர்ணமி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்த பக்தர்கள்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் ஆரியூரில் முத்துசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை ஆடி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் மிக விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஆரியூர் சிவ கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் கோவில் முன் வரிசையாக வைக்கப்பட்டுள்ள பால்குடங்களுக்கு மகாதீபம் காண்பிக்கப்பட்டது.
பின்னர் சிவன் கோவிலில் இருந்து இருந்து பல்வேறு வீதிகள் வழியாக திருக்கோவிலை வந்து அடைந்ததும் கோவில் மூலவர் ஆரியூர் முத்துசாமிக்கு பாலால்சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுவழிபாடு செய்தனர் பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது


