in

திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது


Watch – YouTube Click

திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது

 

திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது – விமான நிலைய இயக்குனர் பேட்டி

திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தை கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அந்த விமான நிலைய முனையம் நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. இது குறித்து திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், திருச்சியில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. காலை 6 மணி முதல் அனைத்து விமானங்களும் புதிய முனையத்தில் இயக்கப்படும். பயணிகள் அனைவரும் புதிய முனையத்தை பயன்படுத்த வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய முனையத்தில் தான் இருக்கும்.

75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு 44.50 லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்திற்கு 3480 பயணிகளை கையாள முடியும்.

புதிய முனையத்தில் 104 இமிகிரேசன் கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளுக்கும், பயணிகளுடன் வருபவர்களுக்கும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நூறு சதவீத பணிகள் நிறைவடைந்ததையடுத்து நாளை முதல் புதிய முனையம் செயல்பாட்டிற்கு வருகிறது.

புதிய முனையத்தில் 10 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தற்போது 5 ஏரோ பிரிட்ஜகள் பயன்படுத்த உள்ளோம். மீதமுள்ள 5 ஏரோ பிட்ஜ்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்.

புதிய முனையம் சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளதால் புதிய முனையத்திற்கு பேருந்து இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையிலும் கோரிக்கை வைத்துள்ளோம்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 17.60 லட்சம் பயணிகள் கையாண்டுள்ளோம். அதில் சர்வதேச பயணிகள் மட்டும் 13.50 லட்சம் பேர் உள்ளனர் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

 கால்நடைகளுக்கு வீடு தேடிச் சென்று கோமாரி தடுப்பூசி போடும் நிகழ்வு

‘Singapenne’  Maneesha Mahesh