in

நடந்தை பெரியகாண்டி அம்மன் கோவிலில் ஆனி பௌர்ணமி விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நடந்தை கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் ஆனி மாத புதன்கிழமையுடன் கூடிய பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது

விழாவின் நிகழ்வாக மூலவர் பெரியகாண்டி அம்மன் மற்றும் உற்சவர் அம்மனுக்கு பல வகை வாசனை திரவியங்கள் ஆன பஞ்சாமிர்தம் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் குங்குமம் கரும்பு சாறு அரிசி மாவு சந்தனம் பன்னீர் மற்றும் கலச அபிஷேகங்கள் செய்து மூலவர் பெரியகாண்டி அம்மனுக்கு சந்தன காப்புடன் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் உற்சவர் பெரியகாண்டி அம்மனை எழுந்தருளன் செய்து இருபுறமும் திருவிளக்கு ஏற்றி 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. சிவாச்சாரியார் மந்திரங்கள் ஓதி நாமாவளிகள் கூற திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது .

இறுதியாக அனைத்து திருவிளக்கிற்க்கும் தூப தீபம் காண்பிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

திருப்பதி மலையில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் ஆரியூர் முத்துசாமி ஆலயத்தில் ஆடி பௌர்ணமி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்த பக்தர்கள்