2026 எண் வடிவில் மாணவ மாணவிகளின் யோகா விழிப்புணர்வு……
உலக யோகா தினம் முன்னிட்டு 2026 எண் வடிவில் அமர்ந்து யோகா செய்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு……….
யோகா என்பது உடலையும் மனதையும் ஆன்மாவையும் ஒன்றிணைக்கும் ஒரு பழங்கால இந்திய காதலை ஆகும். அத்தகைய யோகக் கலையை உலகளாவிய அங்கீகாரத்திற்கு கொண்டு சென்று ஐக்கிய பொது சபை 2014 ஆம் ஆண்டு ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனவே ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் மிக நீண்ட நாள் ஆன ஜூன் 21 உலக யோகா தினம் கொண்டாடப்படுகின்றது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி வி.வி.கோயில் தெரு, டிஎஸ்எஸ்என். நடுநிலைப்பள்ளியில் ஹெல்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் கோ.கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் உலக யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஸ்போர்ட்ஸ் அகாடமையில் பயணம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 2026 என் வடிவத்தை வரைந்து அதன் மீது அமர்ந்து பத்மாசனம் பர்வதாசனம் பத்ம யோக முத்திரை உள்ளிட்ட பல்வேறு யோக கலைகளை செய்து யோகா செய்வதன் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்வில் வாலாஜாபாத் 2026-2027 ஏழாம் ஆண்டின் லைன்ஸ் சங்க தலைவர் சி.கலைமணி, செயலாளர் மகேஷ் குமார்,பொருளாளர் ரவிச்சந்திரன், 2025-2026 ஆம் ஆண்டின் லயன்ஸ் சங்க தலைவர் முனுசாமி, செயலாளர் சண்முகம், பொருளாளர் எம்பி.ஆனந்த் மற்றும் லயன் சங்க நிர்வாகிகளுடன், செயலாளர் கவிதா, யுனிவர்சல் சன்மார்க்க சங்க யோகா ஆசிரியர் கனிஷ்கா உடன் பெற்றோர்களும் பங்கேற்றனர்.


