in

உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு இடமாக குலசேகரப்பட்டினம் இருக்கும்


Watch – YouTube Click

உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு இடமாக குலசேகரப்பட்டினம் இருக்கும்

 

உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு இடமாக குலசேகரப்பட்டினம் இருக்கும் – இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

திருச்சி என் ஐ டி கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது இன்று தேசிய அறிவியல் தினம். உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வளரும் இந்தியாவாக வர வேண்டும் என்ற நோக்கில் இந்தாண்டு தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி என் ஐ டி கல்லூரியில் அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தை பொருத்தவரை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. விண்வெளி அறிவியல் தொழில்நுட்பம் ஆராய்ச்சி மூலம் பல செயற்கைக்கோள்களை அனுப்பி வைத்துள்ளது. குறிப்பாக நிலவில் நீர் இருப்பதை இந்தியா தான் கண்டுபிடித்துள்ளது. அதுதான் மற்ற நாடுகள் நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

அதே போல ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் அனுப்புனால் மட்டும் போதாது அதை தாண்டி ஒரு சிறப்பான இடமாக குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது.

உலக அளவில் திருப்பி பார்க்க கூடிய இடமாக குலசேகரபட்டினம் இருக்கும். இங்கிருந்து குறைவான செலவில், குறைவான எரிபொருள் மூலமாக விண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் அனுப்ப முடியும். குலசேகரபட்டினம் மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் ஏவு தளத்திற்கு தேவையான ஏவுகலன்கள், எரிபொருள், உதிரி பாகங்கள் தயாரிப்பு, சிறிய செயற்கோள்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் நடைபெறுவதால் மிகக் குறைந்த செலவில் விண்வெளிக்கு செயற்கைகோள்கள் அனுப்புவதற்கு சிறந்த இடமாக குலசேகரப்பட்டினம் இன்னும் 3 ஆண்டுகளில் சிறப்பாக அமையும்.

அந்த வகையில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அதன் அடையாளமாக இன்று குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஒரு ராக்கெட் ஏவப்படுகிறது. உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு இடமாக குலசேகரப்பட்டணம் உருவாகும். வளர்ந்து வரும் இந்தியாவினுடைய தொழில்நுட்பம் நம்முடைய தமிழ் மண்ணில் இந்தியாவின் தென்கோடியில் குலசேகரப்பட்டினத்தில் உலகத்திற்கு காண்பிக்க உள்ளதை நமக்கு பெருமிதமாக உள்ளது.

மாணவர்கள் கவனமுடன் படித்து தேர்வு எழுத வேண்டும். தெரிந்த வினாக்களுக்கு சிறப்பான விடை எழுதினால் சிறப்பான மதிப்பெண் கிடைக்கும். விவசாய முதல் விண்வெளி வரை உள்ள துறை சார்ந்த படிப்புகள் ஏராளமாக உள்ளன. பின்வரும் காலங்களில் சரியான துறையை தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்க வேண்டும் என்றார்.

ஏ ஐ தொழில்நுட்பம் குறித்து அவர் கூறியதாவது, ஏர் உழுவதற்கு பதிலாக டிராக்டர் வந்தது, நடந்து செல்வதற்கு பதிலாக கார் வந்தது, இதனால் நேரங்கள் மிச்சப்படுத்தப்பட்டன. இருந்தபோதிலும் மனித உடல் குன்றி போகவில்லை. ஒரு காலத்தில் உழைப்பாக இருந்த பயிற்சி தற்போது உடற்பயிற்சியாக மாறி உள்ளது.

அதேபோல் எதிர்காலத்தில் மூளையை உபயோகிக்காமல் எப்படி வேலை செய்யலாம் என வரும் போது அந்த மூளை பயிற்சிக்கான பயிற்சி எடுக்க வேண்டிய அவசியம் வரும். இப்போ எப்படி உடற்பயிற்சி செய்து நம் உடலை பார்த்துக் கொள்கிறோமோ, அதுபோல மூளைக்கு மூளை பயிற்சி செய்து பாதுகாத்து கொள்ளக்கூடிய காலம் வரும் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

சிவகங்கை ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை

கண்டா வரச் சொல்லுங்க வால் போஸ்டர்கள் கழுதைக்கு நல்ல தீனி