in

கண்டா வரச் சொல்லுங்க வால் போஸ்டர்கள் கழுதைக்கு நல்ல தீனி


Watch – YouTube Click

கண்டா வரச் சொல்லுங்க வால் போஸ்டர்கள் கழுதைக்கு நல்ல தீனி

 

கண்டா வரச் சொல்லுங்க வால் போஸ்டர்கள் கழுதைக்கு நல்ல தீனி. யார் ஒட்டுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்.திருவாரூரில் முத்தரசன் காட்டம்

திருவாரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் வை. செல்வராஜ் தலைமையில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்வு மற்றும் மாவட்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட குழு சார்பில் 50 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக மாநில செயலாளர் முத்தரசனிடம் கொடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் திமுக தலைமையிலான கூட்டணியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை அனைத்துக் கட்சிகளுடன் பேசி முடிக்கப்பட்டுள்ளது.மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தீர்மானிக்கப்படும். இங்கு எந்த பிரச்சனையும் கிடையாது. இவைகள் அனைத்தும் மிக சுமூகமாக முடியும் என்று அவர் கூறினார். எத்தனை தொகுதிகள் கேட்டு இருக்கிறீர்கள் எத்தனை தொகுதி தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு 39 தொகுதிகளையும் கேட்டிருக்கிறோம் 33 தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.

கண்டா வரச் சொல்லுங்க போஸ்டர் குறித்த கேள்விக்கு தமிழகம் முழுவதும் இந்த போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள். இப்படி போஸ்டர் ஒட்டுகிற யோக்கியவான்கள் தங்களது பெயரை போட்டு போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும். அல்லது அவர்கள் கட்சி பெயரை போட்டு ஒட்ட வேண்டும். ஒட்டுமொத்தமாக நாடாளுமன்ற தொகுதி மக்கள் என்றால் நாடாளுமன்ற தொகுதி மக்களை இவர்கள் என்ன குத்தகைக்காக எடுத்து இருக்கிறார்கள். யார் ஒட்டுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டு இருக்கிறது.

இப்படி ஒட்டுகிறவர்கள் ஒரு கருத்தை சொல்கிறார்கள். தங்களுடைய எதிர்ப்பை சொல்கிறார்கள். அதை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் வெளிப்படையாக சொல்ல வேண்டும். திருடன் மாதிரி எதற்கு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டுகிற ஒரு நபர் யார் என்பதை பகிரங்கமாக சொல்ல முடியாத அவல நிலைக்கு இந்த கட்சிகள் எல்லாம் ஆளாகி இருக்கின்றன. அது அதிமுகவா பாஜகவா யார் என்று தெரியவில்லை. ஏன் இப்படி திருட்டுத்தனமாக பண்ண வேண்டும்.

நான் சொல்கிறேன் மோடி ஒரு பாசிஸ்ட் மோடி வேண்டுமானால் என் மீது வழக்கு போடட்டும். மோடி ஒரு சர்வாதிகாரி என்று நான் சொல்கிறேன் மோடி வேண்டுமானால் வழக்கு போடட்டும். அதை விடுத்து சந்துக்குள்ளும் பொந்துக்குள்ளும் நின்று கொண்டு மோடி ஒரு பாசிஸ்ட் மோடி ஒரு சர்வாதிகாரி என்று நாங்கள் ஒருபோதும் சொல்ல மாட்டோம்.

குற்றசாட்டுகள் சொல்வதை நாங்கள் பகிரங்கமாக சொல்வோம் அந்த முதுகெலும்பு இல்லாதவர்கள் இப்படி வால் போஸ்டர்களை ஒட்டுகிறார்கள்.இந்த வால்போஸ்டர்கள் எங்களை ஒன்றும் செய்யாது.இந்த வால்போஸ்டர்கள் கழுதைக்கு நல்ல தீனி அவ்வளவுதான் அதுக்கு மேல் ஒன்றும் கிடையாது.

கூட்டணி கட்சிகள் உதவி இல்லாமல் திமுக வால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு இப்படி சொல்கிற ரோசமுள்ள அண்ணாமலை ஏன் கூட்டணிக் கட்சிகளை தேடி அலைந்து கொண்டே கிடக்கிறார்.கதவும் திறந்து இருக்கிறது ஜன்னலும் திறந்திருக்கிறது என்று ஏன் கூறுகிறார்.ஒரு கட்சியும் அங்க போகவில்லை.திமுக கூட்டணி இல்லாமல் நிற்க தயாரா என்று அண்ணாமலை கேட்கிறார்.பாஜக ஏன் தேசிய ஜனநாயக கூட்டணி என்று வைத்திருக்கிறது.இந்தியா முழுவதும் மோடி தனித்து நிற்கட்டுமே.எதுக்கு ஆள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.மற்ற கட்சியில் இருந்து எதற்கு ஆள் பிடிக்கிறார்கள்.

நேற்று மோடி கூட்டத்தில் ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்து சேர போவதாக அறிவித்தார்கள். அப்புறம் அதை ஒத்தி வைக்கிறேன் என்று கூறுகிறார்கள். ஏன் ஆள் ஏதும் வரவில்லையா. எதிர்பார்த்த ஆள் வரவில்லையா. ஆள் பிடிக்கிற வேலையில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. ஆகையினால் தயவுசெய்து பத்திரிகையாளர்கள் அண்ணாமலை பற்றி எல்லாம் கேள்வி கேட்காதீர்கள். அது மாதிரி ஒரு லூசு உலகத்திலேயே கிடையாது.

இந்தியா கூட்டணி தலைவர்கள் அணி மாறுவது குறித்த கேள்விக்கு சபலத்திற்கு ஆசைப்பட்டு பலர் அவ்வாறு செய்யலாம் எல்லோரும் அப்படி செய்வதில்லலை. இது கூட்டணியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. எங்களைப் பொறுத்தவரை அதிமுக பாஜக இரண்டையுமே எதிர்கொள்வோம். இரண்டையும் எதிர்கொண்டு எங்களது கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு இடமாக குலசேகரப்பட்டினம் இருக்கும்

பாலராமரை தரிசிக்க 300 பேர் பாஜக சார்பில் அயோத்திக்கு அழைத்து செல்லப்பட்டனர்