in

தாழையம்பட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய ஆடி திருவிழா

தாழையம்பட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய ஆடி திருவிழா

 

தாழையம்பட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய ஆடி திருவிழா-ஊராட்சி தலைவர் ஹேமா மோகனசுந்தரம் சிறப்பு தரிசனம்..

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் வாரணாசி ஊராட்சி தாழையம்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் ஆடி மாதம் 1ஆம் ஆடி திருவிழா முன்னிட்டு காலை அம்மன் அழைத்தல் நிகழ்வை தொடர்ந்து, மதியம் அம்மனுக்கு கூழ்வார்த்தலும் நடைபெற்றது.

பின்னர் மாலை வண்ண மலர்மாலைகள் அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றதில் வாரணாசி ஊராட்சிமன்ற தலைவர் எம்.பிரேமா மோகனசுந்தரம், கிராம பொதுமக்களுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

விழா குழுவினர் ஏற்பாட்டில் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

What do you think?

மோகனூர் கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் சுவாசினி கன்னியா பூஜை

தஞ்சாவூர் பெரியகோயில் மஹா வாராஹி அம்மன் நவதானியம் அலங்காரம்