in

 ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

 ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வல்லப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடிவாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலின் புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை பல்வேறு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.

விழா குழுவினர் கோபி,செந்தில் ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் கணேசன், திமுக வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர் லயன் வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் ஆன்மிக பெரியோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், யாகசாலை பூஜை நேரங்களில் வேதபாராயணம், தேவார இன்னிசை மற்றும் நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை 45 நாட்கள் மண்டல அபிஷேகமும் நடைபெற உள்ளது.

எனவே, சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த ஆன்மிக விழாவில் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

What do you think?

ஆண்டுக் கணக்கில் தேங்கும் கழிவுநீர்! மக்கள் அவதி