பொய்யாமொழி விநாயகர் கோவில் – சங்கடஹர சதுர்த்தி
தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் – சங்கடஹர சதுர்த்தி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தீவனூர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ பொய்யாமொழி விநாயகருக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து ஊஞ்சலில் காட்சி அளித்த ஸ்ரீயாமொழி விநாயகருக்கு மகா தீபாரதனை நட்சத்திர தீபம் கும்ப தீபம் சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம் மற்றும் மலர் அர்ச்சனை, பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

