in

பாய் மரம் படகு மூலம் விழிப்புணர்வு

பாய் மரம் படகு மூலம் விழிப்புணர்வு

 

ராமேஸ்வரத்தில் கடல்சார் பாரம்பரிய மற்றும் நீல பொருளாதரத்தின் முக்கியத்துவம் குறித்து என்.சி.சி மாணவர்கள் நடுக்கடலில் பாய் மரம் படகு மூலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் என்.சி.சி இயக்குநருக்கு கீழ் உள்ள மதுரை மற்றும் கடலூர் குழுக்களை சேர்ந்த 20 என்.சி.சி மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தனர்

இதனை அடுத்து ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து தனுஷ்கோடி வரை பாய்மரப்படகில் 20 மாணவர்களை ஏற்றிக்கொண்டு கடலோர காவல் படையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் நடுக்கடலில் பயிற்சி அளித்தனர்.

மேலும் தற்போது கடல் சார் தொழில்கள் மெல்ல மெல்ல அழிந்து வரும் நிலையில் அதனை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு கடலுக்கு போவோம் மற்றும் கடல் சார் பாரம்பரிய மற்றும் நீல பொருளாதரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்து நோக்கத்தோடு என்.சி.சி மாணவர்கள் கடலில் பயணம் செய்ததோடு தங்களை தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகளையும் கடலோர காவல்துறையினர் வழங்கினர்.

What do you think?

செப்டம்பர் 1 முதல் செல்போன் கொண்டு செல்வதற்கான முழுமையான தடை

பொய்யாமொழி விநாயகர் கோவில் – சங்கடஹர சதுர்த்தி