in

செல்லியம்மன் கோயில் ஆடி மாதபால்குட அபிஷேக  திருவிழா

செல்லியம்மன் கோயில் ஆடி மாதபால்குட அபிஷேக  திருவிழா

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில்.

இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இக்கோயிலுக்கு 10 ஆம் ஆண்டு பால்குட அபிஷேக விழா மற்றும் உற்சவ விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு காலை முதல் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

               

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து செல்லியம்மனுக்கு பால் அபிஷேக விழா செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மரக்காணம், கந்தாடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

What do you think?

  மதுரை மாநகர் முழுவதும் திரிஷா நற்பணி

அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் & காளியம்மன் திருக்கோயில்  ஊருடையார்புரம்