in

பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்க நாணயம்

பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்க நாணயம்

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் 2025-2026 ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் முதலிடம் பெற்ற மாணவன் பிரதீப்க்கு மேன்னாள் இயற்பியல் ஆசிரியர் மரிய சூசை அவரது குடும்பத்தார் சார்பில் தொடர்ந்து 20வது ஆண்டாக தங்க நாணயத்தையும், வேதியியல் பாடப்பிரிவு சார்பில் உதவி தலைமை ஆசிரியர் முனைவர் பொன்.பாக்கியநாதன் சார்பில் ஊக்கத்தொகை மற்றும் கேடயம் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஜேம்ஸ் சார்பில் ஊக்கத்தொகையினை ஆகியவற்றை தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ தலைமை தாங்கி வழங்கினார்.

இதில் பள்ளியின் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கணினி பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் சிவராமனுக்கு ஓய்வு பெற்ற கணினி ஆசிரியர் சிவக்குமார் ஏற்பாட்டில் ஊக்கத்தொகையினை தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ வழங்கி பாராட்டினார்கள்.

What do you think?

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலய 50 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா அர்த்தனாரீஸ்வரி அலங்காரம்

மதுபோதை காரணமாக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு