திருவள்ளூர் நகர் ஸ்ரீ ஏரிக்கரை பொன்னியம்மன் சமேத பொன்னீஸ்வரர் ஆலய கூழ்வார்த்தல் திருவிழா.
திண்டிவனம் திருவள்ளூர் நகர் ஸ்ரீ ஏரிக்கரை பொன்னியம்மன் சமேத பொன்னீஸ்வரர் ஆலய கூழ்வார்த்தல் திருவிழா.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் செஞ்சி ரோடு திருவள்ளூர் நகரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிருக்கும் ஸ்ரீ ஏரிக்கரை பொன்னியம்மன் சமேத பொன்னீஸ்வரர் ஆலய கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு மூலவர் ஏரிக்கரை பொன்னியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ ஏரிக்கரை பொன்னியம்மன் ரிஷபவனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து ரிஷப வாகனத்தில் காட்சியளித்த ஸ்ரீ ஏரிக்கரை புண்ணியம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ ஏரிக்கரை பொன்னியம்மன் ஆலய நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் திருவள்ளூர் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

