மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
ஸ்ரீமுஷ்ணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள சாத்தமங்கலம், மேல் புளியங்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தொடர் மழை காரணமாகத் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் நனைந்து சேதமடைந்து வருகின்றன.
கொள்முதல் நிலையங்களில் மேற்கூரை மற்றும் தார்ப்பாய் வசதிகள் இல்லாததால், நனைந்த நெல் மணிகள் முளைத்துத் தரம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கொள்முதல் வேகம் குறைக்கப்பட்டுள்ளதோடு, தேங்கியுள்ள லட்சக்கணக்கான நெல் மூட்டைகளைச் சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள விவசாயிகள், நெல் மூட்டைகளைப் பாதுகாத்து விரைவாகக் கொள்முதல் செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


