உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்
வேப்பூர் அருகே மங்களூரில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு அமெரிக்க இந்தியவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மங்களூர் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக அமெரிக்க மற்றும் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராகவும் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பா மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் உருவ பொம்மை பதித்த நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கச்சா எண்ணெய் மற்றும் விவசாய பொருட்களை இறக்குமதி உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
மாசிஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க பிரதிகள் உள்ளிட்டோர் மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


