கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி விழா
கடலூர் மாவட்டம் கடலூரில் இல்லத்தரிசி வீட்டில் மத நல்லினக்கத்தின் வலிமையை உணர்த்தும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி விழா.
இவ்விழாவில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்றனர் கடலூர் பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் திருமதி ரமணி அம்மாள் அவர்கள் இவர்கள் ஸ்ரீ.கிருஷ்ணா என்ற தங்கள் இல்லத்தில் கிருஷ்ணர் பிறந்தநாளை கிருஷ்ண விழாவாக தங்கள் இல்லத்தில் கொண்டாடி வருகிறார்.
ஸ்ரீபெருமாள் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீ ராதையுடன் கிருஷ்ணர் என மூன்று உருவ பொம்மைகள் வெகு அழகாக வண்ண மலர்களால் அலங்கரிக்கபட்டு
பின்னர் கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய் சீடை லட்டு பழங்கள் என வெகு அழகாக வைத்து பின்பு குழந்தைகள்கிருஷ்ணர் வேட அணிந்து இன்நிகழச்சியில் பங்கேற்றனர் கிருஷ்ணரின் பக்தி பாடல்களும் பாடப்பட்டன.

கடந்த 40 வருடத்திற்கு மேல் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடிவரும் ரமணி அம்மாள் இந்தாண்டு அனைத்து சமூக மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுவையான உணவுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கபட்டன.

