in

தொண்டி அருகே குடும்பத்தில் இடப்பட்ட தகராறில் வாலிபர் சரக்கு வாகனம் முன் பாய்ந்து தற்கொலை:

தொண்டி அருகே குடும்பத்தில் இடப்பட்ட தகராறில் வாலிபர் சரக்கு வாகனம் முன் பாய்ந்து தற்கொலை:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, சோழியக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (36). இவருக்கும், சம்பை பகுதியைச் சேர்ந்த டெய்சி பாலா என்பவருக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

இதனால் ஸ்டீபன்ராஜ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவருத்தத்தில் காணப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சம்பையில் வசித்து வந்த ஸ்டீபன்ராஜ், கிழக்கு கடற்கரை சாலைப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக தொண்டி நோக்கிச் சென்ற சரக்கு வேன் முன்பு திடீரென பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொண்டி காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

ஹரியானா தேசிய தரவரிசை டென்னிஸ் போட்டி தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் வீராங்கனை டானிகா என். ஃபெர்னாண்டோ வெற்றி