ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை
ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை… ஒன்றரை கோடி தாண்டியதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது..
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ஒன்றரை கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்று காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் நாடு முழுவதும் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று கோவில் கிழக்கு கோபுர மண்டபத்தில் தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள் இணைந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ராமநாதசுவாமி கோவிலின் உபகோவில் உண்டியல் காணிக்கைகளும் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது.

உண்டியல் காணிக்கை எண்ணி முடிக்கப்பட்டதில், ஒரு கோடியே ஐம்பது லட்சத்து முப்பத்து இரண்டாயிரத்து, எழுபது ரூபாய் பணம், 48 கிராம் பொன் இனங்கள் 3 கிலோ 612 கிராம் வெள்ளி இனங்கள், 122 வெளிநாட்டு பணங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


