பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி போகும் சிறுவர் பூங்கா
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான போக்குவரத்து சிறுவர் பூங்கா பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி போகும் சூழ்நிலை.

தஞ்சை பெரிய கோவில் அருகே போலீஸ் துறைக்கு சொந்தமான ஒன்றை ஏக்கர் காலி நிலத்தில் பெரிய கோவிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்தி வைத்தனர் இந்நிலையில் அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் தஞ்சை மாநகரம், ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்டு 1400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டது.
அதில் 20 லட்சம் மதிப்பீட்டில் போலீஸ் துறைக்கு சொந்தமான அந்த காலியிடத்தில் சிறுவர் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவர் போக்குவரத்து பூங்கா அமைப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 20 லட்சம் மதிப்பில் 2022 ஆம் ஆண்டு போக்குவரத்து சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த பூங்காவில் சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டது, இதுவரை ஐந்து வருட காலமாக இந்த பூங்கா பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது1.
மேலும் 20 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்ட அனைத்து உபகரணங்களும் வீணாகி துருப்பிடித்து அழிந்து போகும் சூழலை உள்ளது.

மேலும் தற்போது தஞ்சாவூர் பெரிய கோவில் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் இந்த போக்குவரத்து சிறுவர் பூங்காவை மாற்றி வாகன நிறுத்தமாக மாற்ற உள்ளதாக அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான இந்த சிறுவர் பூங்காவை எந்த சேதமும் இன்றி சுத்தப்படுத்தி பொதுமக்கள் குழந்தைகள் பயன்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.


