in

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

 

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ரேவதி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் குழந்தைகளுக்கு இடையே சரியான பிறப்பு இடைவெளி இருக்கும் போது குடும்பங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் தஞ்சாவூர் சட்டமன்றத் உறுப்பினர் விஜய் சரவணன், மேயர் (பொறுப்பு) அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

ஸ்ரீ பிரம்ம முகி தில்லை காளியம்மன் ஆலய ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

பண்ருட்டி அவுலியா தர்கா கந்தூரி ஊரூஸ் விழா