பிரான்ஸ் தேசிய தினம்.. பிரான்ஸ் மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பில் மலரஞ்சலி…
பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி புரட்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை மக்கள் நிறுவினர்.

இதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 14-ம் தேதி பிரான்ஸ் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பிரெஞ்சு காலனியாக இருந்த காலத்தில் இருந்து புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, புதுச்சேரியில் 237-வது பிரான்ஸ் தேசிய தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதனையொட்டி கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் துாணில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதர் ஜீன்-பிலிப் ஹூதர் (Jean-Philippe Huther) மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், இந்தியா, பிரான்ஸ் இரு நாட்டு தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.


