in

காமராஜ் தொகுதி சாரம் பகுதியில் மக்களுக்கு ஆலயத்தில் அறுசுவை விருந்தினை பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

காமராஜ் தொகுதி சாரம் பகுதியில் மக்களுக்கு ஆலயத்தில் அறுசுவை விருந்தினை தனது கைகளால் பரிமாறிய லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும் காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுவை காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதனையடுத்து சாரம் பகுதியில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், அப்பகுதி பொதுமக்களுக்கு தனது கைகளால் அறுசுவை விருந்தை பரிமாறினார்.

மேலும், ஆலயத்தில் சேவையாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி அவர்களின் சேவையை பாராட்டினார். லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ரவி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார்,கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

புதுவை காமராஜ் சாலை உப்பனாறு வாய்க்கால் பணிகளை காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் ஆய்வு

புதுச்சேரியை இந்தியாவின் முதல் ‘இதயப் பாதுகாப்பு ஒன்றியப் பிரதேசமாக’ உருவாக்கும் முன்னெடுப்பு.”