ஊழல் குறித்து கவர்னர் தலையிட்டு விசாரிக்க வேண்டும்… நாராயணசாமி வலியுறுத்தல்
ரேசன் அரிசி கொள்முதல் ஊழல் குறித்து கவர்னர் தலையிட்டு விசாரிக்க வேண்டும்… நாராயணசாமி வலியுறுத்தல்…
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கடந்த என்ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசு கொண்டு வந்தது. கொல்கத்தா நிறுவனம் அரிசி விநியோகம் செய்ததில் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்ததையடுத்து டெண்டர் ரத்தானது.
கடந்த ஆண்டு ஜூன் முதல் ஓராண்டு அரிசி விநியோகிக்க டெண்டர் விடப்பட்டது. கிலோ அரிசி ரூ 43. 47 என குறிப்பிட்டனர். சென்னையிலுள்ள மத்திய அரசு கேந்திரிய பண்டார் நிறுவனம் டெண்டர் எடுத்தனர். அதில் 6 ஆயிரம் டன் தரமில்லா அரிசி என கான்பெட் நிறுவனத்தினர் நிராகரித்தனர்.
ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை அரிசி விநியோகம் நடந்தது. அதன்பிறகு அரிசி விநியோகம் நடக்கவில்லை. நிராகரித்த 6 ஆயிரம் டன் அரிசியும் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை அரிசி வரவில்லை.
அரிசி விநியோகம் செய்யாத கேந்திரிய பண்டார் டெண்டரை அரசு ரத்து செய்யவில்லை. அந்த நிறுவனம் கட்டிய பிணை தொகையை திருப்பி தரக்கூடாது. அபராதத்தையும் புதுச்சேரி அரசு வசூல் செய்யவில்லை. தற்போது அரிசி விநியோகத்துக்கு புதிய டெண்டர் உள்நோக்கத்தோடு போடப்பட்டுள்ளது.
அரிசி விநியோக டெண்டர் விதிமுறையை மாற்றியுள்ளனர். புதுச்சேரி அரசின் கான்பெட் நிறுவனத்திற்கும் கேந்திரிய பண்டாருக்கும் இடையே ஊழல் நடந்துள்ளது.
அரிசி காலத்தோடு விநியோகம் செய்யாத நிலையில் டென்டரை ரத்து செய்யாதது ஏன்.? ரேஷன் அரிசி டெண்டரில் ஊழல் நடந்துள்ளது. இதை விசாரிக்க வேண்டும். கான்பெட் நிதி ரூ 8 கோடியை அமுதசுரபிக்கு மாற்றியுள்ளார். இதற்கு அனுமதி தந்தது யார்.? கவர்னர் தலையிட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறினார்.

புதுச்சேரியில் எப்போது சபாநாயகர் தேர்தல் நடக்கும், எப்போது அமைச்சர்களுக்கு இலாக்கா தருவார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது. இதனால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது. மக்கள் விரோத ஆட்சிதான் நடக்கிறது. அதிகார சண்டை நடப்பதால் அவர்களை நம்பி வாக்களித்த மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
முதல் அமைச்சர், அமைச்சர்கள் கூண்டோடு ராஜிநாமா செய்ய வேண்டும். 6 மாதம் ஆட்சி செயல்பாட்டை பார்க்க நினைத்தோம். போராட்டத்தை கையில் எடுக்க உள்ளோம். புதுச்சேரியில் தவெக கூட்டணி தொடர்பாக கட்சி பொறுப்பாளர் கிரீ்ஷ்ஷோடங்கர் தவெக கட்சி தலைமையுடன் பேசி சொல்வதாக நாராயணசாமி
கூறினார்..


