in

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியால் மக்களிடையே இந்தியா கூட்டணிக்கு செல்வாக்கு உயரவில்லை – ராம்தாஸ் அத்வா


Watch – YouTube Click

புதுச்சேரி…காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியால் மக்களிடையே இந்தியா கூட்டணிக்கு செல்வாக்கு உயரவில்லை என இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்தியக் குடியரசுக் கட்சியின்
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ராம்தாஸ் அத்வாலே,பிரதமர்
நரேந்திரமோடி நம் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார். அவர்
நம் நாட்டில் மிகச்சிறந்த தலைவராக மட்டுமல்லாது, உலக அளவில் தலைவராக
விளங்குகிறார். நம் நாட்டை உலக அளவில் பெருமைப்படுத்தும் நரேந்திரமோடியே
மீண்டும் தேர்தலில் வென்று பிரதமராவார் என்றார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படவேண்டிய
அவசியமில்லை. சட்டத்தை பிரதமர் நரேந்திமோடி பாதுகாத்துவருகிறார்.
அதனால்தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர்
ஏற்படுத்தி குடியரசுக் கட்சி பிரதமருக்கு ஆதரவளிக்கிறது. அவரையே மீண்டும்
நாட்டின் பிரதமராக்கவும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்கிறோம் என
ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியால் மக்களிடையே இந்தியா கூட்டணிக்கு
செல்வாக்கு உயரவில்லை. பிரதமர் நரேந்திரமோடி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு
அழைத்துச் செல்வதை மக்கள் புரிந்துள்ளதால், அவருக்கான ஆதரவுதான்
பெருகிவருகிறது. புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பாஜக
வளர்ச்சியடைந்துவருகிறது என அத்வாலே தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

வேதாரண்யம் அருகே ஒளவையார் கோவில் ஆண்டு திருவிழா அரசு சார்பில் நடைபெற்றது

இண்டியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் செல்லாத ஓட்டு முதல் அமைச்சர் பேச்சு