in

ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஜாக்கி பக்னா.. க்கு கோவாவில் திருமணம்

ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஜாக்கி பக்னா.. இக்கு கோவாவில் திருமணம்…வைரலாகும் திருமண அழைப்பிதழ்

தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி சமிபத்தில் வெளியான அயலான் என்ற படத்தில் நடித்தவர் ரகுல் ப்ரீத்தி சிங், இவர் தற்போது இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார்.

ரகுல் ப்ரீத்தி சிங் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலிக்கிறார் என்ற செய்தியை கடந்த பதிவில் பார்த்தோம் இந்நிலையில் இவர்கள் விரைவில் கோவாவில் உள்ள தனியார் resort டில் திருமணம் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் ரகுல் ப்ரீத்தி சிங் தனது திருமணத்தை வெளிநாட்டில் செய்ய திட்டமிட்டுள்ளார் எந்த நாட்டில் என்று அவர் காதலருடன் ஆலோசித்து வந்த நிலையில் பிரதமர் மோடி வெளிநாடுகளில் விருந்து விசேஷங்கள் நடத்துவதை தவிர்த்து இந்தியாவில் நடத்துங்கள் என்று மக்களுக்கு கூறிய அறிவுறையை ஏற்று திருமணத்தை கோவாவில் நடத்த முடிவு செய்ததாக தெரிவிக்கிறார்கள்.

ரகுல் ப்ரீத்தி சிங் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதில், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி திருமணம் கோவா கடற்கரை அருகே வரும் பிப்ரவரி 21ந் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் வாழ்த்துக்களை தொடர்ந்து நாமும் இதே அன்புடனும் இணைபிரியா நெருகத்துடனும் வாழ ரகுல் ப்ரீத்தி ஜாக்கி…இருவருக்கும் நம் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்வோம்.

What do you think?

பிரபல டைரக்டர் பிணமாக வீட்டில் மீட்பு

ஏ ஐ தொழில் நுட்பத்தின் முலம் மீண்டும் விஜயகாந்த் நடிக்கிறார்