in

சந்தைக்கு வந்த மாடுகளின் தாகம் மற்றும் வெப்பத்தை தனித்த – ஆணையர் எழில்ராஜன்


Watch – YouTube Click

சந்தைக்கு வந்த மாடுகளின் தாகம் மற்றும் வெப்பத்தை தனித்த – ஆணையர் எழில்ராஜன்

 

புதுச்சேரியில் கோடை வெயிலில் கால்நடைகளில் தாகத்தை தீர்க்கும் வகையில் மன்னாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மதகடிப்பட்டு வார சந்தைக்கு வந்த மாடுகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து மாடுகளுக்கு தண்ணீர் அடித்து வெயிலின் வெப்பத்தை தனித்த ஆணையர் எழில்ராஜன் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது..

புதுச்சேரியில் கோடை வெயிலின் தாகம் கடுமையாக உள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் சாலை சந்திப்புகளில் பசுமை பந்தல் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினர் நீர், மோர் பந்தல் அமைத்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் குலோந்துங்கன் அறிவுறுத்தலின்பேரில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து சார்பிலும் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் பறவைகள், கால்நடைகள் குடிப்பதற்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டியும் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி புதுச்சேரி மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் வார சந்தை நடைபெறும். இங்கு ஈரோடு, பொள்ளாச்சி, சேலம் உட்பட பல நகரங்களிலிருந்து கால்நடைகள் விற்பனைக்கு வரும். இந்த சந்தையில் மாடு, ஆடு, கால்நடை பராமரிப்புக்கு தேவையான பொருட்கள், கயிறுகள் விற்கப்படும். விற்பனையாகும் வரை கால்நடைகள் மாலை வரை சந்தையில் நின்றிருக்கும்.

இதனால் சந்தைக்கு வந்த கால்நடைகளின் தாகம் தணிக்க குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் தேவையான அளவு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. கால்நடைகளின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கவும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் மன்னாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் மாடுகளுக்கு தண்ணீர் அடித்து குளிர்ச்சி படுத்தினார்.


Watch – YouTube Click

What do you think?

இந்தியாவில் 1% பணக்காரர்களிடம் 40% சொத்து!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தேசிய சமூக நீதிக்கட்சி மனு