in

பேரூராட்சியில் சேதம் அடைந்த சமுதாயக்கூடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


Watch – YouTube Click

பேரூராட்சியில் சேதம் அடைந்த சமுதாயக்கூடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன இதில் ஆறு வார்டுகளில், மட்டும் பொதுக் கழிப்பறைகள் உள்ளன.

இரண்டாவது வார்டு அரசு பள்ளி தேர்வு பகுதியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு ஜவகர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பெண்கள் கழிவறை மேற்கூரை மற்றும் கட்டிடங்கள் பழுதடைந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது.

கடந்த 27.12.2022 அன்று நடந்த பேரூராட்சி கூட்டத்தில் இந்த கழிவறையை பிடித்து அப்புறப்படுத்தி விட்டு அப்பகுதியில் புதிய கழிவறை கட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதே போல ஐந்தாவது வார்டு சிவன் கோவில் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் மிகவும் பழுதடைந்து பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் கட்டிடத்தில் அருகில் வரவோ, அமரவோ செல்லவோ கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அந்த அளவுக்கு கட்டிடம் மிகவும் பழுதடைந்து எந்த நேரம் கீழே விழுமோ என்கின்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்தும், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த இரண்டு கட்டிடங்கள் தவிர மூன்றாவது வார்டு பகுதியில் உள்ள பொதுக் கழிவறை மற்றும் மஞ்சமேடு பகுதியில் உள்ள மோட்டார் அறை, போன்ற பல்வேறு பழுதடைந்த கட்டிடங்கள் பிடித்து அப்புறப்படுத்தாமல் உள்ளது.

இதனால் எந்த நேரத்திலும் இந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்து அப்பகுதியில் அருகில் இருக்கும் பொது மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக அரசவல்லி தெரு பகுதியில் இருக்கும் பெண்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய நான்கு அறைகள் மட்டுமே, கொண்ட கழிப்பறை தற்போது மிகுந்து மிகுந்த சிதிலம் அடைந்த நிலையில் உள்ளது.

ஆனால் இதை பயன்படுத்த முடியாத அளவு உள்ளது என்று பேரூராட்சி அறிவித்து, பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில் அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் ஆண் முதியவர்கள் பயன்படுத்தக்கூடிய துர்பாக்கிய நிலையில் இதை பேரூராட்சி அனுமதித்து உள்ளது.

எனவே பழுதடைந்த கட்டிடங்களை கழிவறையை அகற்றிவிட்டு புதிய கழிவறை கட்ட வேண்டும் இல்லை என்றால் பேரூராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் மற்றும் காரி துப்பும் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சிகள் எச்சரித்து உள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை

தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்