in

அமைச்சர் கமலக்கண்ணன் மூட்டை தூக்கும் வீடியோ காட்சி பரவி வருகிறது


Watch – YouTube Click

புதுச்சேரி முன்னாள் வேளாண்துறை மற்றும் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் மூட்டை தூக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களை பரவி வருகிறது.

புதுச்சேரி கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காரைக்கால் திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் வேளாண்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்…அப்பொழுது இவர் விவசாய நிலங்களில் வேலை செய்வது வழக்கமாக கொண்டு இருந்தார் அதனை ஆதரவாளர்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்…

தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில் தனது சொந்த வேலைகளை கவனித்து வருகிறார்…இதில் விவசாய வேலைகளில் மிதந்த ஈடுபாடுகளை கொண்டு செயல்பட்டு வருகிறார் இந்த நிலையில் தனது நிலத்தில் பயிரிட்டவையை டிராக்டர் மூலம் தனது வீட்டிற்கு கொண்டு வந்தார் அப்பொழுது டிராக்டரிலிருந்து மூட்டைகளை தலையில் சுமந்து இறக்கி வைத்தார்… இதனை பார்த்த ஆதரவாளர் ஒருவர் தங்களுக்கு நாங்கள் வாக்களித்தோம் ஆனால் நீங்கள் இதுபோன்ற வேலைகளை செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர் அதற்கு அவர்… இந்த வேலைகள் செய்தால்தான் சாப்பாட்டிற்கு அரிசி கிடைக்கும் என தெரிவித்தார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களை பரவி வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் கேலண்டுல்லா மலர்கள்..