in

திமுக அரசு, குவாட்டர் கொடுத்து குடிக்க சொல்கின்றது


Watch – YouTube Click

திமுக அரசு, குவாட்டர் கொடுத்து குடிக்க சொல்கின்றது

கரூர் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டர் – மறைந்த முதல்வர் அம்மா (ஜெ) மடிக்கணினி கொடுத்து மாணவர்களை படிக்க சொன்னார்கள் ஆனால் திமுக அரசு, குவாட்டர் கொடுத்து குடிக்க சொல்கின்றது ! என முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு

வேட்பாளர் தங்கவேலு வெளியூரிலிருந்து வர தாமதமானதால் பிரச்சாரத்தை துவங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பிரச்சார முடிவதற்குள் இடையில் ஒரு நாள் உங்களிடம் ஓட்டு கேட்க வேட்பாளர் தங்கவேலுவை பிரச்சாரத்துக்கு அழைத்து வருவேன் என கூறினார்.

கரூரில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது பொதுமக்கள் இடையே உரையாற்றும் போது

இதற்கு முன் இருந்த எம்பி பார்த்ததுண்டா அவர் பெயர் என்னவென்று தெரியுமா? என பொதுமக்கள் இடையே கேட்ட போது தெரியாது என கூறினார்கள்

ஐந்து வருடங்களாக ஜோதிமணி எங்க போனீங்க என பொதுமக்கள் கேளுங்கள்

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் முதியவர்களை ஜோதிமணி கட்டிப்பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள், பள்ளிக்கூடத்தில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து போட்டோக்கு போஸ் கொடுப்பது அதுதான் அவரது வேலை இது எல்லாமே தேர்தல் நேரத்தில் ஜோதிமணி நடிப்பிற்காக

நாம் அம்மா ஆட்சியில் செய்த சாதனை திட்டங்களை கூறி ஓட்டு கேட்கிறோம் மீண்டும் நமது அரசு அமைந்த உடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்

திமுக ஆட்சியில் பால் விலை உயர்வு, நில வழிகாட்டு மதிப்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்வு எனவே சிந்தித்து வாக்களியுங்கள் நமது அம்மா அரசு வந்தால் மட்டுமே அனைத்து திட்டங்களும் கிடைக்கும்

எல்லா திட்டங்களையும் நிறுத்திவிட்டு திராவிட மாடல் திமுக அரசு கூறி வருகிறது

நமது அம்மா ஆட்சியில் 58 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது அம்மா லேப்டாப் கொடுத்து படிக்க சொன்னார்கள் ஸ்டாலின் குவட்டர் கொடுத்து குடிக்க சொல்கிறார் இதுதான் உண்மை கஞ்சா கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதிகளில் எளிதாக கிடைக்கிறது அதேபோன்று மதுரையில் பெண்களுக்கு என பிரத்தியேகமாக பார் உள்ளது. செந்தில் பாலாஜி திருமண மண்டபம், விளையாட்டு மைதானத்தில் மது குடிக்கலாம் என உத்தரவிட்டார் இன்று புழல் சிறையில் உள்ளார்.

அதனால் தான் அம்மா படிக்க சொன்னார்கள் ஸ்டாலின் குடிக்க சொல்கிறார் மறக்காமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று அப்பொழுது தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

ஸ்வீட்ஸ் குடோனில் சிலிண்டர்கள் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் தீயால் கருகி சேதம்

225 எம் பி க்கள் மீது குற்றவியல் வழக்குகள்