in ,

225 எம் பி க்கள் மீது குற்றவியல் வழக்குகள்


Watch – YouTube Click

225 எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள்

தற்போது மக்களவை எம்.பி.க்களாக பதவி வகிக்கும் 514 பேரில் 225 பேர் (44 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுள்

சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில்: தற்போது மக்களவை எம்.பி.களாக பதவி வகிக்கும் 514 பேரில் 225 பேர் (44 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவர்களுள் 29 சதவீதம் பேர் மீது கொலை, கொலை முயற்சி, இரு சமூகங்களுக்கிடையே மோதலை உண்டாக்குதல், கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய மிகத் தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.

5 பாஜக எம்.பி.க்கள் மீது கொலை வழக்கு தீவிர குற்றச்செயல்களில் ஈடுபட்ட எம்.பி.க்களில் 9 பேர் மீது கொலை வழக்குகள் உள்ளன. அவர்களில் 5 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். அதேபோல் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 28 எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுள் 21 எம்.பி.க்கள் பாஜகவைச் சேர்ந்தவர்களாவர்.

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக 16 எம்.பி.க்கள் மீது வழக்குகள் உள்ளன. அவர்களுள் பெண்களுக்கு பாலியல் துண்புறுத்தல் இழைத்ததாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் மூன்று கோடீஸ்வர எம்.பி.க்கள் அதிகமான கோடீஸ்வர எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உள்ளன. மற்ற கட்சிகளிலிருந்தும் கணிசமான எம்.பி.க்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். அந்த வகையில் நகுல் நாத் (காங்கிரஸ்) முதலிடத்திலும் டி.கே. சுரேஷ் (காங்கிரஸ்) இரண்டாமிடத்திலும் ரகு ராமா கிருஷ்ண ராஜு (சுயேட்சை) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மாநில வாரியாக குற்றவியல் வழக்குகள் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகார், ஆந்திரம், தெலங்கானா மற்றும் ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 50 சதவீதத்தும் மேலான எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.
73 சதவீத எம்.பி.க்கள் பட்டதாரிகள்

தற்போது மக்களவையில் 73 சதவீத எம்.பி.க்கள் பட்டதாரிகளாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியை பெற்றிருக்கின்றனர். மக்களவையில் மொத்தமாக 14 சதவீத பெண் எம்.பி.க்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

திமுக அரசு, குவாட்டர் கொடுத்து குடிக்க சொல்கின்றது

ஈரோடு எம் பி கணேச மூர்த்தி சாவுக்கு வைகோ, ஸ்டாலின் தான் காரணம்