in ,

திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் நிறுத்தினார்கள்


Watch – YouTube Click

திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் நிறுத்தினார்கள்

10 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் பெருமை வந்துவிட்டதாகவும் ஒரு கட்சியை நாங்கள் கூட்டணிக்கு சேர்த்து இருந்தால் கூட ஆட்சியை பிடித்திருப்போம் எனவும் வரும் தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெறும் எனவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் முன்னிலையிலும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி,கழக இளைஞர்கள்,இளம் பெண் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரபிரபா முத்தையா, ராஜவர்மன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியபோது.

எம்ஜிஆர் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார் என்றால் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை எடுத்து மணமகன் மணமகள் கழுத்தில் போட்டு விடுவார்.

அதுவே கருணாநிதி கல்யாணத்திற்கு சென்றார் என்றால் மணமகன் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை எடுத்து தனது கழுத்தில் போட்டுக் கொள்வார் இதுதான் எம்ஜிஆர் இருக்கும் கருணாநிதிக்கும் உள்ள வித்தியாசம்.

செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு திமுக ஆட்சியில் மண் அள்ள முடியவில்லை, எடப்பாடியார் ஆட்சியில் மண் அள்ளுவதற்கு இலவசம் தந்தார்கள்.திமுக ஆட்சியில் மண் அள்ளுவதற்கு அதிகமான பணம் கேட்கிறார்கள்.

எம்ஜிஆர் மீது பற்றுள்ள தொண்டர்கள் இன்றும் கோடிக்கணக்கான பேர் உள்ளனர் அப்படிப்பட்ட எம்ஜிஆரை லூசு பையன் ராஜா விமர்சித்துள்ளான் அவரை நீலகிரியில் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும்.எம்ஜிஆர் என்னும் ஜோதியை அணைக்க நினைத்தால் அழிந்து போவார்.

எம்ஜிஆர் வாழ்க என்று சொன்னவன் இன்று வரை அமோகமாக சிறப்பாக வாழ்த்து கொண்டிருக்கிறான்.
எம்.ஜி ஆர் ரசிகர் நான் வால் போஸ்ட் ஒட்டினோம்.நாங்கள் எம்எல்ஏ வாக வருவோம் என நினைக்கவில்லை.

புரட்சி தலைவர் எம்ஜிஆரை உரைத்துப் பேசுபவன் எவனும் விளங்கியதாக வரலாறு கிடையாது.ராஜா வாய்க்கு வாஸ்து சரி இல்லை அதாம் எம்ஜிஆரை விமர்சனம் செய்கிறார் இறந்த பின்பு ஒருவரை விமர்சிக்க கூடாது.

திமுகவினர் அண்ணா திமுகவை அழிக்க அம்மா சென்ற வண்டியை விழுப்புரத்தில் அடித்து அவர்களை கொல்ல பார்த்தார்கள். இன்று எடப்பாடியாரை கொடநாடு கொலை வழக்கில் சேர்க்கப் பார்க்கிறார்கள் அண்ணா திமுகவிற்கு யார் விசுவாசமாக உள்ளார்களோ அவர்களை அழிக்க பார்ப்பார்கள்.

திமுக ஆட்சி முதல்வரே புரிந்து கொள்ளுங்கள் ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்துள்ளோம் . பத்து ஆண்டுகள் வெற்றியை பெற்றுள்ளதால் பெருமை வந்துவிட்டதாகவும் ஒரு கட்சியை கூட்டணிக்கு சேர்த்திருந்தால் நிச்சயம் ஆட்சியை கொடுத்திருப்போம் எனவும் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என்று கடைகளில் பேசுகிறார்கள்.எடப்பாடி யார்தான் முதலமைச்சராவார் என்று சொல்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் எண்ணற்ற பல நலத்திட்டங்களை எடப்பாடியார் மூலம் கொடுத்தோம் திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் நிறுத்தினார்கள் இந்த குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதை எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவில் நாம் சபதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் அண்ணா திமுக சொல்வதுதான் சட்டம் எடப்பாடியார் சொல்வது தான் வேதம் என்ற நிலைமையை டெல்லியில் நாம் உருவாக்க வேண்டும்.
அதிமுக தொண்டர்கள் நன்றாக உழைக்க வேண்டும் மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று சொல்லிவிட்டு மது பாட்டிலுக்கு விலை ஏற்றியது திமுக அரசு.

இன்று தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மதுபான பார்கள் இயங்கி வருகிறது. குடிக்கிற சரக்கு அரசிடம் பெற்ற சரக்கு இல்லை தனியாக தயார் செய்து டூப்ளிகேட் சரக்கை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.சரக்கை குடிப்பவர்களுக்கு ஆயுள் கம்மியாகி விடுகிறது.

மதுபானத்தை ஒழிக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எடப்பாடியாரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும்.

வரும் நாடமன்ற தேர்தலில் வெற்றி பெற நாம் ஒன்றாக இணைந்து உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 

Watch – YouTube Click

What do you think?

விரைவில் மீண்டும் ஒரு ராமாயணம் உருவாகிறது

கல்வியில் கடைசி மாவட்டம், மது விற்பணையில் முதல் மாவட்டம் விழுப்புரம் அன்புமணி ராமதாஸ் பேட்டி